மாணவ / மாணவியர் கவனத்திற்கு

அன்பார்ந்த  முன்னாள் மாணவர்களே. தாங்கள்(Arrears Exam)  Covid காலத்தில் ஏப்ரல் 2020ல் தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதாமல் கல்லூரி தேர்வாணையத்தின் மூலமாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் பட்டியலும் செல்லாது என பல்கலைக்கழகமும் நீதிமன்றமும் அறிவித்திருக்கிறது. ஆகையால் தற்போது அந்த தேர்வுகளை 05.05.2021 முதல் 12.05.2021 க்குள் முறையாக  வீட்டிலிருந்த படி தேர்வை எழுதி அதன் மூலம் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. அப்படி உள்ள மாணவர்களுக்கு அந்த அந்த துறை சார்பாக  மாணவர்கள் இணைக்கப்பட்டு அதன் வழியாக வினாத்தாள் அனுப்பி தேர்வு நடைபெற உள்ளது. இது கட்டாயமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பாடங்களை முழுமையாக தேர்வு எழுதி விடைத்தாள்களை  ஆசிரியர்கள் அறிவுறுத்துகிற உரிய முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் விடைத்தாள்கள் திருத்தி மதிப்பெண் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

*குறிப்பு.

*2007 முதல் 2017 வரை உள்ள (Arrears) மாணவர்களுக்கு மட்டும். முறையாக கல்லூரியில்  தேர்வு எழுதியோ அல்லது தேர்வு எழுதி தபாலில் அனுப்பி வைத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பொருந்தாது.

*மேலும் விவரங்களுக்கு தாங்கள் தங்கள் துறைத் தலைவரை தொடர்பு கொள்ளவும்

நன்றி

 

தேர்வாணையாளர் அலுவலகம்

யாதவர் கல்லூரி

மதுரை.