
DEPARTMENT OF TAMIL
DEPARTMENT OF TAMIL
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||
பேரா.கு.சுப்பிரமணியன் எம்.ஏ.,எம்ஃபில்.,பிஎச்.டி., HOD & Lecturer Dept of Tamil – SF Mobile No: 9865744117 |
|||||||||||||||||||||||||||||||||||||||
தமிழ்த்துறை ( சுயநிதிப்பிரிவு ) யாதவர் கல்லூரி தன்னாட்சி (தேசியத் தர மறு மதிப்பிட்டில் ‘A’ தகுதி பெற்றது) மதுரை – 625014. சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறை 1996ஆம் ஆண்டு முதல் திறம்படச் செயல்பட்டு வருகின்றது. நுண்உயிரியல் துறை, உயிர் வேதியியல் துறை, கணினி அறிவியல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, கணினிப் பயன்பாட்டியல் துறை, ஆங்கிலத்துறை, கணிதத்துறை மாணவர்களுக்குப் பகுதி 1 – தமிழ் பயிற்றுவிக்கும் துறையாகச் செயல்பட்டு வருகின்றது. சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறையில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் .
நூலகம் துறைக்கென தனியான நூலகம் 2௦௦9 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. 244 நூல்களைக் கொண்டு அனைத்துத்துறை,மாணவர்களுக்கும் பயன் அளிக்கக் கூடியதாகத் துறைநூலகம் இயங்கி வருகின்றது. திறமைகளின் களம் போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் வகையில் கருத்தரங்கம், கவிஞர்களை உருவக்கும் முயற்சியின் விதையாய்க் கவியரங்கம், மாணவர்களே பங்கேற்று நிகழ்த்தும் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கலந்துரையாடல் என்பன போன்ற திறமைகளை உருவாக்கிடும் களமாகத் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு செயல்பட்டு வருகின்றது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றிப் பள்ளி மாணவர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் தன் சேவையைத் தொடர்ந்து செய்து வருகின்றது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு முதல் பதினோறாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களிடையே அறிவுத் திறனை மேம்படுத்தும் விதமாக ‘அப்துல்கலாம் அறிவுத் திறன் போட்டி’ என்ற பெயரில் வினாடிவினாப் போட்டிப் நடத்தப்பட்டு வருகின்றது. யாதவர் கல்லூரியைச் சேர்ந்த அனைத்துத் துறை மாணவர்களது திறமையை அரங்கேற்றும் விதமாக ‘சிறகுகள்’எனும் கலை நிகழ்ச்சிப்போட்டி சிறப்பாக நடைபெற்று வருகின்றது, அதிகப் புள்ளிகள் பெரும் துறைக்குச் சுழற்கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது. மாநில அளவில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கலைவிழாப் போட்டிகள் ‘வாகை‘ என்ற பெயரில் சிறப்புடன் நிகழ்த்தப்படுகின்றது அதிகப் புள்ளிகளைப் பெற்று முதலிரண்டு இடத்தினைப் பெரும் கல்லூரிகளுக்குச், சுழற்கேடயமும், சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது. விரிவாக்கப் பணியாக (Extension Activities) அருகிலுள்ள கிராமப்புற மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து வருகின்றது. பேராசிரியர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுடன், மாணவர்களைத் திறம்பட உருவாக்கும் களமாகத் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு சிறப்போடு இயங்கி வருகின்றது. |